குமாரபாளையம் அரசு பள்ளியில் வ.உ.சி., ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அரசு பள்ளியில் வ.உ.சி., ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் சானார்பாளையம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வ.உ.சி., ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா, ஆசிரியர் தின விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் வ.உ.சி., ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

குமாரபாளையம் சானார்பாளையம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வ.உ.சி., டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா, ஆசிரியர் தின விழா, விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

வ.உ.சி., ராதாகிருஷ்ணன் திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்கள் பாடல்கள் மூலமும், நாடகம் மூலமும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர். இதில் தீனா, கோபிராவ், இசை அமைப்பாளர் மணிக்ரிஷ்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது. வ.உ.சி., ராதாகிருஷ்ணன் திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில் நகர தி.மு.க. செயலர் செல்வம் பங்கேற்று ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் பி.டி.ஏ.தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் அன்பரசு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business