விஜயகாந்த் பிறந்தநாள்விழா ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் தேமுதிக சார்பில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள்விழா ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை செயலர் சிவசுப்ரமணி பேசினார்.
ஆண்டுதோறும் தே.மு.தி.க. சார்பில் ஆக. 25ல் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட, நகர, வார்டு செயலர்கள், ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நகர செயலர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலர் சிவசுப்ரமணி பங்கேற்று ஆலோசனை வழங்கினார். விழாவில் கட்சியின் கொடியை அனைத்து வார்டுகளிலும் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், முக கவசங்கள், கபசுர குடிநீர், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துதல், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை வழங்குதல், ஆதரவற்ற, ஏழை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்கான அயர்ன் பாக்ஸ், டைலரிங் மெசின் வழங்குதல், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்தவர்களை கவுரவப்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் மகாலிங்கம், மணியண்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu