தமிழகத்தில் போட்டோ சூட் ஆட்சி - விஜயகாந்த் மகன் பேச்சு!

தமிழகத்தில் போட்டோ சூட் ஆட்சிதான் நடக்கிறது என குமாரபாளையத்தில் நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பேசினார்

தமிழகத்தில் போட்டோ சூட் ஆட்சிதான் நடக்கிறது என தே.மு.தி.க. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பேச்சு

தமிழகத்தில் போட்டோ சூட் ஆட்சிதான் நடக்கிறது என குமாரபாளையத்தில் நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பேசினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் விஜய் சரவணன் நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் நடந்தது.

நகர செயலர் நாராயணசாமி, மாவட்ட அவை தலைவர் சவுந்திரராஜன், மாவட்ட பொருளர் மகாலிங்கம், ஒன்றிய செயலர் மணியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மற்றும் நகர கழகச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள்.மாவட்ட கேப்டன் மன்றம், மாவட்ட மகளிர் அணி, மாவட்ட மாணவர் அணியினர், மாவட்ட வர்த்தக அணியினர், மாவட்ட தொண்டர் அணியினர், மாவட்ட இளைஞர் அணியினர், மாவட்ட நெசவாளர் அணியினர், மாவட்ட விவசாய அணியினர், மாவட்ட தொழில் சங்கம், முன்னாள் ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக தலைமை நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், துணைச் செயலாளர்கள். மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கழக சார்பணியினர்.வார்டு பிரதிநிதிகள்.ஊராட்சி செயலாளர்கள்.ஊராட்சி பிரதிநிதிகள் .கழகத் தொண்டர்கள்.பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தே.மு.தி.க. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் பேசியதாவது:

நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இருக்கேன். பத்து வருடம் அண்ணன் தங்கமணியை சமாளித்து கொண்டு இருந்தார்கள். அடுத்து இப்போ தி.மு.க. ஆட்சியை சமாளித்து கொண்டு உள்ளார்கள். விஜயகாந்த் மீது காட்டிய அன்பை என்மீதும் காட்டுகிறார்கள். மகிழ்ச்சி. இந்தியாவில் தே.மு.தி.க.கட்சிதான் லஞ்சமும், ஊழலும் இல்லாத கட்சி. இலவச கல்வி, இலவச மருத்துவம். இதுதான் தேவை. குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு போனால் ஈரோடு அனுப்பி விடுகிறார்கள். உங்கள் கையை உயர்த்தி உண்மையை சொல்லுங்கள். (பொதுமக்கள் கைகளை உயர்த்தி ஆமாம் என்றனர்) இந்த கைகளில் உள்ள ஒரு விரலால் முரசுக்கு வாக்களித்து இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? வீட்டிற்கு ரேசன் பொருட்கள் கொடுப்போம் என்றார். பல மாநிலங்கள் அதை பின்பற்றுகின்றன.

விஜயகாந்த் முன்பு போல் பேசினால் அவர்தான் ஆட்சி அமைப்பார் என்று சொல்கிறீர்களே, அவர் ஊர் ஊராக, வீதி வீதியாக சுற்றி பிரச்சாரம் செய்தார். அப்போது தெரியவில்லை உங்களுக்கு. அவர் பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யணும். புதிய தலைவரை நீங்கள் பார்க்க வேண்டும். உதயநிதி தானாக வரவில்லை. ஆறுமுறை முதல்வராக இருந்தவரின் பேரனாக வந்துள்ளார். முன்னாள் மேயரின் மகனாக வந்துள்ளார். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் படையுடன் வந்துள்ளார். அண்ணாமலை பா.ஜ.க.விற்கு வேலை பார்க்கிறார்.

நான் அரசியலுக்கு வந்த போது அப்பாவுக்கு உடல்நலம் சரி இல்லை. பண பலம் இல்லை. நான் ஆர்க்கிடெக்ட் படித்து உள்ளேன். எங்கள் பெற்றோருக்கும் நான் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் நான் அதை செய்யாமல் அப்பாவின் கனவை நனவாக்க வந்துள்ளேன். அப்பாவின் தைரியம் எனக்கு இருக்கு. தே.மு.தி.க. மீண்டும் எழுந்து நிற்கும். தொழிலாளர்களின் கட்சி. எங்கள் கட்சியயை யாரும் எதுவும் செய்ய முடியாது. செந்தில்பாலாஜியை எதற்கு காவேரி மருத்துவமனைக்கு மாற்றினீர்கள்? அப்போ, அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா? இவ்வளவு ஆண்டுகள் அங்கு சென்று சிகிச்சை செய்து வந்த பொதுமக்கள் உயிர்கள் உயிர்கள் அல்லவா? நீட் ரத்து செய்தாரா? ஸ்டாலின். அனிதா மரணத்தில் எவ்வளவு அரசியல் செய்தார்கள்? விஷ்ணுபிரியாவும் ஒரு பொண்ணுதான். அதை பற்றி யாரும் ஏன் பேசவில்லை? போட்டோ சூட் ஆட்சி தான் நடந்து வருகிறது. ஒரே மாதிரி கல்வி கொடுங்கள். நாட்டை பற்றி கவலை இல்லாமல் ஐ.பி.எல். பார்க்கிறீர்கள். மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். இவர் சிங்கப்பூர் எதுக்கு போனார்? நாட்டிற்கு தலைவராக வர அரசியலுக்கு வருபவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்பது குறித்து பார்க்கிறீர்களா? இடைப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆட்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி உட்கார வைக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சிக்கு அம்மா கடினமாக உழைத்து உள்ளார். அப்பாவிற்கு அம்மா பக்க பலமாக இருந்தார். எனக்கு அப்பாவின் சொத்தில் பங்கு வேண்டாம். அப்பாவின் தொண்டர்கள் போதும்.

கட்சிக்குள் ஈகோ வேண்டாம். ஒன்று சேர்ந்து உழைப்போம். 2024இல் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று, பாராளுமன்றத்தில் நமது கட்சி எம்.பி. குரல் ஒலிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விஜய்பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில்பாலாஜியை, தமிழக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தேர்தல் கூட்டணி பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். லாபம் வராத டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும். விஜய் குறித்து பேச விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வரட்டும். அவரது திரைப்படம் வெற்றி பெறட்டும். அப்பா நலத்துடன் இருந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!