அப்பா குறித்த கேள்விக்கு விரக்தியுடன் பேசிய விஜயகாந்த் மகன்!

அப்பா குறித்த கேள்விக்கு விரக்தியுடன் பேசிய விஜயகாந்த் மகன்!
X
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பங்கேற்று அப்பா நலமாக உள்ளார் என நிருபரின் கேள்விக்கு விரக்தியுடன் கூறினார்.

அப்பா நலமாக உள்ளார்! நிருபரின் கேள்விக்கு விரக்தியுடன் பேசிய விஜயகாந்த் மகன்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பங்கேற்றார். அவரை விஜயகாந்த் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆர்வத்தில் கைகளை பிடித்து அப்பா எப்படி இருக்கார் என்று கேட்டனர்.

அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, அப்பா நன்றாக உள்ளார், என்றார். மேடையில் ஏறியதும் விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு, விஜய்காந்த் போல் வேடமிட்ட பலர் நடனம் ஆடி, விஜயபிரபாகரனை வாழ்த்தினர். மகிழ்ச்சி நிறைந்த மன நிலையில் விஜயபிரபாகர் பேசினார். அவர் அரசியல் பற்றி பேசிவிட்டு அப்பா நன்றாக உள்ளார், என்றார்.விரைவில் மக்களை சந்திப்பார், என்றார்.

கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் கேள்விகள் கேட்ட போது, ஒரு நிருபர், அப்பா உடல்நிலை மோசமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. அது பற்றி சொல்லுங்கள் என்றார். அதுவரை மகிழ்ச்சி மனநிலையில் இருந்த விஜயபிரபாகர், சற்று சோர்வுடன் அப்பா நலமாக உள்ளார். மேடையில் பேசும்போது கூட அதுதான் கூறினேன். பலரும் பல மாதிரி சொல்வது உண்மை இல்லை. மிக்க நலமுடன் உள்ளார், என்று கூறி, மேடையை விட்டு கீழே இறங்கினார்.

இதனை கண்ட கட்சியினர், அவர்தான் அப்பா நலமாக உள்ளார் என மேடை ஏறும் முன்பும் கூறினார். மேடையில் பேசும் போது கூறினார். மீண்டும் பேட்டி எடுக்கும் போதும் இதே கேள்வி கேட்டால், அந்த மகனின் மனம் என்ன பாடுபடும்? சில நிருபர்கள் கேட்பதால் பலருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது, என்று கூறினார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!