குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பிபின் ராவத்துக்கு மலரஞ்சலி

குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பிபின் ராவத்துக்கு மலரஞ்சலி
X

குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிபின் ராவத் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிபின் ராவத் மற்றும் ராணுவத்தினருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குமாரபாளையம் நகர கிழக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து கைகளில் ஏந்தியவாறு மவுன அஞ்சலி செலுத்தினர். நகர தலைவர் சத்திவேல், செயலர் சந்திரசேகர், பொருளர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!