விஜய் இன்னொரு எம்.ஜி.ஆர். என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் இன்னொரு எம்.ஜி.ஆர். என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
X

படவிளக்கம் : நடிகர் விஜய், கட்சியின் பெயர் அறிவித்ததால், குமாரபாளையத்தில் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை அறிவித்ததையொட்டி விஜய் ரசிகர்கள் குமாரபாளையத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்

விஜய் இன்னொரு எம்.ஜி.ஆர். என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை அறிவித்ததையொட்டி விஜய் ரசிகர்கள் குமாரபாளையத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

திரைப்பட நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். எம்.ஆர்.ராதா, விஜய்காந்த், கமலஹாசன், ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன், ஜெய்சங்கர், உதயநிதி, இயக்குனர்கள் ராஜேந்தர், பாக்யராஜ், சீமான், என பலர் வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். நேற்று அவர் தனது கட்சியின் பெயரினை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார். இதனை கொண்டாடும் விதமாக மாநிலம் முழுதும் அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையத்தில் விஜய் ரசிகர்கள் காந்திசிலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:

இதுவரை விஜய் எப்போது கட்சி துவங்குவார் என எதிர்பார்த்திருந்திருந்தோம். இப்போது அறிவித்தது மகிழ்ச்சி. இன்றுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை. அவர் வழியில் சென்று, பொதுமக்களை சந்தித்து, மக்கள் நல திட்டங்கள் குறித்து எடுத்துரைப்போம். தமிழக மக்களுக்கு விஜய் இன்னொரு எம்.ஜி.ஆர். என பிரச்சாரம் செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story