குமாரபாளையம் சாலையில் திருஷ்டி பூசணிகளை அப்புறப்படுத்திய விடியல் ஆரம்பத்தினர்

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் திருஷ்டி பூசணி துண்டுகள் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

குமாரபாளையத்தில் ஆயுதபூஜை நாளில் வீடுகள், தொழில் நிறுவனங்களை தூய்மை செய்து, பூஜை பொருட்கள் வாங்கி வழிபாடு நடத்துவது வழக்கம். தானும், தன் குடும்பத்தாரும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு, பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பூசணிக்காயை பயன்படுத்தி திருஷ்டி சுற்றிய பின் அதனை சாலையில் போட்டு உடைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அரசு மற்றும் போலீசார் சார்பில் இப்படி செய்யக்கூடாது என தெரியப்படுத்தினாலும், சாலையில் திருஷ்டி பூசணியை உடைத்தால்தான் ஆயுத பூஜை செய்த திருப்தியே பலருக்கு கிடைக்கிறது. இது போன்ற செயல் வருத்தமளிக்கிறது. வாகன ஓட்டிகளை நிலை தடுமாறச் செய்து விபத்துக்கு காரணமாகும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் அவரது அமைப்பின் நிர்வாகிகள் நாகராஜ், ரமேஷ்குமார், மணி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை ஆகியவற்றில் சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயின் துண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai powered agriculture