தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி வெற்றிக் கொண்டாட்டம்..!
குமாரபாளையத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர்.
தி.மு.க. சார்பில் வெற்றிக் கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் மாதம் முதல் தேதி வரை முடிந்தது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.
அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்தியா முழுவதும் 64 கோடி பேர் வாக்களித்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நேற்று அளித்த பேட்டியில் பெருமையாக கூறி இருந்தார். இது உலக அளவில் மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர்கள் தான் அதிக இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளனர். சில இடங்களில் வெற்றியையும் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழக அளவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றமைக்காகவும், குமாரபாளையம் தொகுதி உள்ளடங்கிய ஈரோடு பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் நகராட்சி தலைவரும், வடக்கு நகர பொறுப்பாளருமான விஜய்கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடந்த இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
இதே போல் நகர தெற்கு பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. பாசம் ஆதரவற்றோர் மையத்தில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu