/* */

குமாரபாளையத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நடைமேடை கடைகள்

குமாரபாளையத்தில் நடைமேடை கடைகள் விபத்துக்கு காரணமாகின்றன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நடைமேடை கடைகள்
X

குமாரபாளையத்தில் நடைமேடை கடைகள் விபத்துக்கு காரணமாகின்றன. இடம்: பள்ளிபாளையம் சாலை, மேம்பாலம் பகுதி.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மேம்பாலம், கோட்டைமேடு மேம்பாலம் ஆகிய இடங்களில் பாலத்தின் கீழ் பகுதியில் இளநீர், பழக்கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், உள்ளிட்ட அதிக கடைகள் அமைத்துள்ளனர்.

இந்த கடைகளில் பொருள் வாங்க வரும் நபர்கள் தங்கள் வாகனங்களை கடைகளின் முன்பு நிறுத்துகின்றனர். இதனால் இந்த வழியே செல்லும் கார், பஸ்கள், லாரிகள், டெம்போக்கள் போன்ற வாகனங்களால் விபத்து ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் நடந்து போக அமைக்கப்பட்ட நடைமேடைகளில் இது போன்ற கடைகள் அமைக்கப்பட்டதால் விபத்துகள் ஏற்பட காரணமாகின்றன. இதன் அருகிலேயே போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் இதனை கண்டுகொள்வதில்லை. இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டவரும் பணியிட மாறுதலுக்கு செல்வதாக கூறப்படுவதால் , தலைமை இல்லாத போலீஸ் ஸ்டேஷனாக இருந்து வருகிறது. இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்பட்டு, இது போன்ற நடைமேடை கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 3 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு