வேட்பாளர்கள், பூத் முகவர்களை வெளியேற சொன்ன எஸ்.ஐ.யால் வாக்குவாதம்
போலீஸ் எஸ்.ஐ. செல்வகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள், பூத் முகவர்கள்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர பொறுப்பாளர் மற்றும் தி.மு.க. வேட்பாளர் செல்வம், அ.தி.மு.க. வேட்பாளர் சேகர் உள்ளிட்டவர்களும், பூத் முகவர்களும் பள்ளி வளாகத்தில் ஓட்டுப்பதிவு செய்ய வரும் நபர்களுக்கு அவர்கள் ஓட்டுப்போடும் இடத்தை காண்பித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணிக்காக அங்கு வந்த எஸ்.ஐ. செல்வகுமார் செல்வம் உள்ளிட்ட வேட்பாளர்கள், பூத் முகவர்கள், வயதானவர்களை அழைத்து வந்த குடும்பத்தினர், அனைவரையும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது பற்றி தி.மு.க. நகர பொறுப்பாளரும் வேட்பாளருமான செல்வம் கூறுகையில், நமது வார்டு பொதுமக்கள் ஓட்டுப்பதிவு செய்ய வருகிறார்கள். இங்கு மூன்று பூத் உள்ளது. வருபவர்களுக்கு எங்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என கூறிக்கொண்டு இருந்தோம். எஸ்.ஐ. எங்களை வெளியே விரட்டினார்.
எங்களுக்கு அடையாள அட்டை கொடுத்தது தேர்தல் நாளில் ஓட்டுச்சாவடியில் பணிகளை கவனிக்கத்தான். வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. வெளியில் நிற்க சொல்வதற்கு இந்த அடையாள அட்டை எதற்கு? இதற்கு இவ்வளவுதான் மரியாதையா? நான் தி.மு.க. நகரமன்ற தலைவர் வேட்பாளர் என்றும் கூறினேன். எதை பற்றியும் கவலைப்படாமல் வெளியே அனுப்புவதிலேயே குறியாக செயல்பட்டார்.
பொதுமக்கள், வேட்பாளர்கள், பூத் முகவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டி போலீஸ் உயரதிகாரிகள் இது போன்ற போலீசாரிடம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu