''கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்'' என்பதைப்போல் நடந்த கால்நடை மருத்துவ முகாம்
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீ. மேட்டூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசித்து வந்தவர் சேகர், 47. விவசாயி. இவர் வளர்த்து வந்த பசுமாடு இரு நாட்கள் முன்பு இறந்தது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மாடுகள், ஆடுகள் , கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு மர்ம நோய் தாக்குதல் பரவி வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கால்நடை துறை சார்பில் வீ.மேட்டூர் பகுதியில் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் பசுக்கள், மாடுகள் உள்ளிட்டவைகளுக்கு உரிய சிகிச்சையும், 33 இளங்கன்றுகளுக்கும், 126 ஆடுகளுக்கும் குடற்புழு நீக்க சிகிச்சையும் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல், திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குனர் அருண்பாலாஜி அறிவுரைப்படி, முகாமில் கலந்து கொண்ட கால்நடை வளர்ப்போருக்கு மழைக்கால நோய் தடுப்பு வழிமுறைகள், கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள்,மரபுசார் மருத்துவ குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
மேலும் கறவை மாடுகளுக்கு தேவையான சத்துக்கள் அடங்கிய தாது உப்புக்கலவை பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்'' என்பதைப் போன்று மர்ம நோயால் மாடு இறந்ததும், நோய் பரவிய பின் இந்த கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu