டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார்

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார்
X
டூ வீலரில் சென்றவரிடம் தகராறு செய்தவர்கள் குறித்து, வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே படைவீடு, சாமாண்டூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 37. கட்டுமான கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் சஜீத், 17. சஜீத், தனது தந்தையின் டூவீலரில், அத்தை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் கும்பலாக நின்று கொண்டிருந்த சிலர், வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், சஜீத் தனது டூவீலரை ஓரமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த முகேஷ் என்பவரின் வண்டி மீது மோதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த நபர்கள், சதீஸை தாக்கியுள்ளனர். அதன்பின், கருக்கன்காடு பகுதியில் உள்ள ஜெகதீஸ் என்பவர், மேலும் சில ஆட்களை வரவழைத்ததாக கூறப்படுகிறது. அவர்களும் மீண்டும் நேற்று காலை கும்பலாக வீட்டுக்கு வந்து, மீண்டும் சதீஸை தாக்கியுள்ளனர்.

அப்போது, அல்லிநாயக்கன்பாளையம் மதுரை வீரன் என்பவரை, மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து, வெப்படை போலீசில் சக்திவேல் புகார் கொடுத்துள்ளார். இதன்படி, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்