டேங்கர் லாரியால் புறவழிச்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

டேங்கர் லாரியால் புறவழிச்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
X

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் டேங்கர் லாரியால் புறவழிச்சாலையில் 40 நிமிடத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

குமாரபாளையம் அருகே டேங்கர் லாரியால் புறவழிச்சாலையில் 40 நிமிடத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் டேங்கர் லாரி ஒன்று அதன் கீழ் பகுதியில் போல்ட் கழன்று சாயும் நிலை ஏற்பட்டது.

இதனால் பின்னல் வந்த வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மெக்கானிக்குகள் உதவியுடன் இது சரி செய்யப்பட்டது. இதனால் நேற்று காலை 11:10 மணி முதல் 12:00 மணி வரை வாகனங்கள் செல்ல முடியாமல், ஒரு கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் படுத்தினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!