குமாரபாளையத்தில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க கோரி வாகன பிரசாரம்

குமாரபாளையத்தில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க கோரி வாகன பிரசாரம்
X

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க கோரி, குமாரபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் வாகன பிரச்சாரம் செய்தனர்.

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க கோரி, குமாரபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் வாகன பிரச்சாரம் செய்தனர்.

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க கோரி, குமாரபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் வாகன பிரச்சாரம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம், நமது எதிர்காலத்தை திட்டமிடுவோம், எனும் தலைப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து, தமிழக அரசின் மாணாக்கர்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் பெற, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீதிகள் தோறும் பிரச்சார வாகனம் மூலம் சென்று துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது. பிரச்சார வாகனத்தை வட்டார கல்வி அதிகாரி குணசேகரன் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நன்னறிவுடன் கூடிய, வளமான எதிர்காலம் அமைய, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி அரசு பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்த வாகனத்தை வட்டாரகல்வி அதிகாரி குணசேகரன் தொடங்கி வைத்தார். பி.டி.ஏ.தலைவர் வாசுதேவன், ஆசிரியர் பயிற்றுநர் கணேஷ் குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவி உஷா, கவுன்சிலர் பாண்டிசெல்வி மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அரசு பள்ளிகளில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் துவங்கப்பட்டு, மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் நாராயண நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை பாரதி தலைமையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.ஐ. குணசேகரன் பரிசுகள் வழங்கினர். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் கூறியதாவது:-

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே உள்ளனர்.

நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
உங்கள் திறன்களுக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள் – AI உதவியுடன்!