நாளை பஸ்கள் இயக்கப்படுவதால் வியாபாரிகளுக்கு இப்படி ஒரு சிக்கல்!

நாளை பஸ்கள் இயக்கப்படுவதால் வியாபாரிகளுக்கு இப்படி ஒரு சிக்கல்!
X

இதுநாள் வரை பஸ்கள் இயங்காததால், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வந்தது.

நாளை அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில், தற்காலிக கடை அமைக்க முடியாத நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், நாளை முதல் வணிக வளாகங்கள், கடை நிறுவனங்களை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கணிசமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரச் சந்தைகள் கூடுவதற்கு, நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்ததால், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள், கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், நாளைமுதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதால், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் இனி வியாபாரிகள் தற்காலிகமாக காய்கறிக்கடை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆவரங்காடு பகுதி மற்றும் புதன் சந்தை பகுதிகளில் கூடும் வாரச்சந்தைகளை மீண்டும் திறந்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம், காய்கறி வாரச்சந்தை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai future project