காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மாஸ் கிளீன்

காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மாஸ் கிளீன்
X

குமாரபாளையத்தில் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் மாஸ் கிளீன் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாஸ் கிளீன் செய்யப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் அதிக குப்பைகள் எங்கும் தேங்காதிருக்கும் வகையில் அவ்வப்போது மாஸ் கிளீன் செய்யப்பட்டு குப்பை இல்லாத நகராட்சியாக திகழும் வகையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில் தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள குப்பைகளை மாஸ் கிளீன் எனும் வகையில் முழுவதுமாக அகற்றப்பட்டது.

இது பற்றி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாதிருக்க அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாக தூய்மை பணியாளர்கள், டெங்கு, மலேரியா ஒழிப்பு பணியாளர்கள், ஒவ்வொரு வீடாக சென்று குப்பைகளை தேங்க விட கூடாது, தண்ணீரை பிடித்து வைத்து பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். தினமும் தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். கிணறுகளில் மருந்து தெளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். அதே போல் நகரில் எங்கும் குப்பைகள் தேங்காமல் இருக்க மாஸ் கிளீன் முறையில் அடிக்கடி தூய்மை பணி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil