/* */

குலுக்கல்முறையில் வீட்டுமனை பரிசு: தடுப்பூசி போட ஆர்வத்துடன் திரண்ட மக்கள்

மக்களின் ஆர்வம், ஆவல் காரணமாக பகல் 12 மணிக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது

HIGHLIGHTS

குலுக்கல்முறையில் வீட்டுமனை பரிசு:  தடுப்பூசி போட ஆர்வத்துடன் திரண்ட மக்கள்
X

பவானி வர்ணபுரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முதியோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பவானியில் வீட்டுமனை அறிவிப்பால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

தடுப்பூசி முகாம்கள், நகர் பகுதியில் விழிப்புணர்வு அதிகம் காணப்படும் நிலையில் கிராமங்களில் தடுப்பூசி மீதான ஆர்வம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள , ஆர்வத்தை தூண்டும் வகையில் பவானி தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை, தங்க காசு, வெள்ளி விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக பவானி ஒன்றியத்தில் 39 மையங்களிலும், அம்மாபேட்டை ஒன்றியத்தில் 63 மையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனால் 12 மணிக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகள் தீர்ந்து போயின. தாமதமாக வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இம்முகாம்களில், 10 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வயது முதிர்ந்தவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், வீடு தேடி சென்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இம்முகாமில் ஊசி போட்டுக்கொண்ட பொதுமக்களுக்கு வரும் (செப்.22) புதன்கிழமை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.


Updated On: 19 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!