குமாரபாளையம் அரசு நூலகத்தில் வீரன் அழகு முத்துகோன் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அரசு நூலகத்தில் வீரன் அழகு முத்துகோன் பிறந்த நாள் விழா நடந்தது.
குமாரபாளையம் அரசு நூலகத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோன் பிறந்த நாள் விழா நடந்தது.
இந்திய முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகு முத்துக்கோன். இவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் இன்று வீரன் அழகு முத்து கோன் பிறந்த நாள் விழா நடந்தது. அரசு நூலகத்தில் நடந்த விழாவில் அழகுமுத்துக்கோன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டூர் கண்ணன் மற்றும் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி பி.டி.ஏ தலைவர் ரவி ஆகியோர் புத்தகங்கள் பரிசாக வழங்கினார்கள். இதில் தீனா, உதவிக்கரம் அங்கப்பன், தி.மு.க. மகளிர்அணி நிர்வாகி ராதிகா, தேவிமணி, சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் விடியல் பிரகாஷ் பேசும்போது மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். 1759ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu