குமாரபாளையத்தில் பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (இடம்: தாலுக்கா அலுவலகம் அருகில், )

குமாரபாளையத்தில் பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் ஜீவா செட் அருகில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 39 பெண்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு கணவர் கிடையாது. நிரந்தர வருமானம், சொந்த நிலமோ, வீடோ, சொத்தோ கிடையாது. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் இவர்கள் தினக்கூலிகளாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும், வாடகை வீட்டில் வசிப்பவர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பட்டா வழங்க தாமதம் செய்வதை கண்டனம் தெரிவித்தும், விரைவில் இவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை விடுத்தும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் அருகே மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கை குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு இது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் தொகுதி செயலர் சிந்தனை செல்வன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பாஸ்கர், திருச்செங்கோடு நகர செயலர் சக்தி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலர் முத்துகிருஷ்ணன், பரமத்தி ஒன்றிய செயலர் கிள்ளிவளவன், திருச்செங்கோடு ஒன்றிய துணை செயலர் சக்தி, குமாரபாளையம் நகர துணை செயலர் பிரபு ஒன்றிய மகளிரணி நிர்வாகி லதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
why is ai important to the future