குமாரபாளையத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி பூஜை கோலாகலம்

குமாரபாளையத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி பூஜை கோலாகலம்
X

குமாரபாளையம் தம்மண்ணன் சாலையில் நடைபெற்ற வரலட்சுமி பூஜை.

குமாரபாளையத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

வரலட்சுமி பூஜை என்பதால், குமாரபாளையத்தின் அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தம்மண்ணன் வீதியில் நடைபெற்ற வரலட்சுமி சிறப்பு யாகம், சிறப்பு பூஜையில் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

இது பற்றி அர்ச்சகர் ஜெகதீஸ்வரன் கூறுகையில், வரலட்சுமி பூஜை செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். பெண்களின் தாலி பாக்கியம் நிலைக்கும். பிள்ளைகளுக்கு கல்வி செல்வம் வளம் பெறும். செய்யும் தொழில் மேன்மை பெறும். நோயற்ற வாழ்வு உண்டாகும். கொடிய நோய் தொற்று மறைந்து, பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கும் என அவர் கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!