20 நாட்களுக்கும் மேலாக வி.ஏ.ஒ. அலுவலகத்தில் தண்ணீர் இல்லாமல் கடும் அவதி

20 நாட்களுக்கும் மேலாக வி.ஏ.ஒ. அலுவலகத்தில் தண்ணீர் இல்லாமல் கடும் அவதி
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் ஆழ்துளை மோட்டார் பழுதால் வி.ஏ.ஒ. அலுவலகத்திற்கு 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையத்தில் ஆழ்துளை மோட்டார் பழுதால் வி.ஏ.ஒ. அலுவலகத்திற்கு 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் பாலக்கரை, பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதி ஆழ்துளை மோட்டார் பழுதால் அங்குள்ள வாட்டர் டேங்க்கிற்கு நீர் ஏற்ற முடியவில்லை. இதனால் அதே பகுதியில் உள்ள வி.ஏ.ஒ. அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வராமல் மிகவும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இது குறித்து குடிநீர் வழங்கல் அலுவலர் சரவணன் கூறுகையில், மோட்டார் பழுது ஏற்பட்டு, தற்காலிகமாக வேறு மோட்டார் வைத்தும் பயனில்லை. ஒரே நாளில் பழுது சரிசெய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அவர் கூறினார்.

Tags

Next Story