சீனியாரிட்டி அடிப்படையில் கிராம உதவியாளர் வி.ஏ.ஒ. வாக நியமனம்

சீனியாரிட்டி அடிப்படையில் கிராம உதவியாளர்  வி.ஏ.ஒ. வாக நியமனம்
X

தேவராஜ்

குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர், சீனியாரிட்டி அடிப்படையில் வி.ஏ.ஒ. வாக நியமனம் செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அமானி, அக்ரஹாரம் வி.ஏ.ஒ. அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் தேவராஜ். இவர், தற்போது குமாரபாளையம் தாலுக்காவிற்குட்பட்ட சமயசங்கிலி ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலர் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் 10 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளராக பணியாற்றி, சீனியாரிட்டியில் இருந்தார். சீனியாரிட்டி அடிப்படையில் இவர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், குமாரபாளையம் தாலுக்கா, காடச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார்.

இவரை மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஒ, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார், உதவி தாசில்தார் ரவி, டி.எஸ்.ஒ. சித்ரா, தலைமை சர்வேயர் ரமேஷ், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் ஜனார்த்தனன், கோவிந்தசாமி, கிராம நிர்வாக உதவியாளர்கள் காமராஜ், பழனிவேல் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!