பாசம் முதியோர் மையத்தில் வள்ளி கும்மி ஆட்டம்
குமாரபாளையம் அருகே பாசம் முதியோர் மையத்தில் வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது.
குமாரபாளையம் அருகே பாசம் முதியோர் மையத்தில் வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது.
குமாரபாளையம் ஓலப்பாளையம் பாசம் முதியோர் மையத்தில் சிவகிரி செங்குந்தம் வள்ளி கும்மி ஆட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. மையத்தின் நிறுவனர் குமார் தலைமை வகித்தார். வள்ளி கும்மி ஆட்டத்தைப் போற்றுவோம், தமிழர் பாரம்பரியக் கலையைப் போற்றுவோம் என்ற தலைப்பில் தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் பேசினார்.
இந்த ஆட்டத்தை இன்ஸ்பெக்டர் தவமணி, போலீஸ் எஸ்.எஸ்.ஐ. ராம்குமார் துவக்கி வைத்தனர். பாசம் இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வள்ளி கும்மி ஆட்டக் குழுவினருடன் இணைந்து நடனமாடியது அனைவரையும் பரவசப்படுத்தியது. பாசம் இல்லத்தின் பொறுப்பாளர்கள் முருகேசன், தீபா, பத்மா, நந்தகுமார், தளிர்விடும் பாரதம் தலைவர் சீனிவாசன், பிரபு, உள்பட பலர் பங்கேற்றனர்.
நாட்டின் கலாசாரத்தின் இருப்பிடமாக தமிழகம் திகழ்கிறது. நிலவமைப்பு பழங்கால மரபுகளின் பிறப்பிடமாகும். மேலும் நில அமைப்புகளுக்கு ஏற்ப மக்களின் ஒரு வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது பல தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வருகிறது. கும்மி ஆட்டம் என்ற பழங்கால நடன வடிவமானது தமிழ்நாட்டு மக்களிடம் கிட்டத்தட்ட காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஒரு கலை வடிவம்.
தற்போது பல தமிழ் இயக்கங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பல கலைகளை மீட்டெடுக்கும்விதமாக பயிற்சிகளை வழங்கி கலை விழாக்களை நடத்தி வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu