அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் வல்லபாய் பட்டேல் பிறந்த தின கொண்டாட்டம்!
அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் வல்லபாய் பட்டேல் பிறந்த தின கொண்டாட்டம்
குமாரபாளையம் அரசு பள்ளி மற்றும் அரசு கலை கல்லூரியில் வல்லபாய் பட்டேல் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொன்டனர்.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். வல்லபாய் படேல் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. நேற்று சேமிப்பு தினம் என்பதால் மாணவ, மாணவியர்களுக்கு சேமிப்பு பழக்கம் குறித்து சொல்லி, சேமிப்பு தொடங்கப்பட்டது. விடியல் பிரகாஷ், தன்னார்வலர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.
வல்லபாய் படேல் குறித்து சித்ரா கூறியதாவது:
வல்லபாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.[1]
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார்.
சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.
1909ம் ஆண்டு படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில்(மும்பை) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அப்போது படேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார் .வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu