வழித்தடம் விவகாரம், முத்தரப்பு பேச்சுவார்த்தை

வழித்தடம் விவகாரம்,    முத்தரப்பு பேச்சுவார்த்தை
X
குமாரபாளையத்தில் வழித்தடம் விவகாரம் சம்பந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

வழித்தடம் விவகாரம்,

முத்தரப்பு பேச்சுவார்த்தை


குமாரபாளையத்தில் வழித்தடம் விவகாரம் சம்பந்தமாக

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு சமுதாய நபர் ஒருவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர், கல் வைத்த நபர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நட்டு வைத்த நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகார் கொடுத்து, அந்த பிரச்னை தீராத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. சுகந்தி தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது. ஆனால் இடம் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் வசம் ஒரு தரப்பினர் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். நேற்று மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நில அளவீடு செய்து, அவர்கள் கேட்டபடி வழங்கப்பட்டது. தற்போது ஒரு தரப்பினர் தங்கள் பகுதிக்கு செல்ல வழித்தடம் கேட்டு வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. சுகந்தி, தாசில்தார் சிவகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன் பின் தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வழித்தடம் கேட்டு வருகின்றனர். காலம் காலமாக அவ்வழியாக சென்று வருதாகவும் கூறி வருகின்றனர். இது தவறான தகவல். இது குறித்து ஆர்.டி.ஓ. சுகந்தி, தாசில்தார் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், நீங்கள் கேட்கும் வழித்தடம் ஏற்கனவே சென்று வந்ததுதான் என ஆதாரத்துடன் எழுதி தர சொல்லி கேட்டனர். அதற்கு உரிய ஆதாரம் நாங்கள் கொடுத்து உள்ளோம். மற்றொரு தரப்பினர் ஆதாரம் இல்லை என கொடுத்துள்ளனர். இதன் அறிக்கை ஆர்.டி.ஒ.க்கு சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் இதுகுறித்து முடிவு செய்து கூறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் வழித்தடம் விவகாரம் சம்பந்தமாக ஆர்.டி.ஓ. , தாசில்தார் ஆகியோர் தட்டான்குட்டை பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story
Similar Posts
போப் ஆண்டவர் மறைவுக்கு அரசு உதவி பெறும்   சி.எஸ்.ஐ.பள்ளி சார்பில் மவுன அஞ்சலி
மே. 15க்குள் தமிழில் பெயர்ப்பலகை  வைக்க   நகராட்சி அறிவுறுத்தல்
பொக்லின் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்  நூற்றுக்கும் மேற்பட்ட  பொக்லின்கள் நிறுத்தி வைப்பு
வழித்தடம் விவகாரம்,    முத்தரப்பு பேச்சுவார்த்தை
ஜீவனாம்சம் பெற வரலட்சுமியின் தொடர் போராட்டம்
என்ன சொல்ரீங்க,  பப்பாளியுடன் சேர்த்து இதெல்லாம் சாப்பிடக் கூடாதா ?
எஸ்.ஐ. தாக்குதலுக்கு எதிராக 970 வக்கீல்கள் கண்டனம்
இளநீர் வியாபாரி விபத்து புண் வலி   தாங்காமல் விஷமருந்தி சாவு
மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்த  கலெக்டர்
அரசு வேலைக்கு இலவச படிப்பு
பட்ட பகலில் வீடு புகுந்து திருடிய பெண் கைது
தசைகளின் தோழன் – புரோட்டீன் உணவின் முக்கியத்துவம்
மதுபான கடையை எதிர்த்து பொது மக்கள் எதிர்ப்பு