குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள்

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்.

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி 20 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெற்றது.

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், குமாரபாளையம் பகுதியில் 66 ஆயிரத்து 384 பேர் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். இதில் முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 61 ஆயிரத்து 828 பேர்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 39 ஆயிரத்து 785 பேர்கள். மீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு தடுப்பூசி முகாம் 20 இடங்களில் நடைபெற்றது.

சுகாதார பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் மூலம் 33 வார்டுகளில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்