நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக வாகன பிரச்சாரம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் குமாரபாளையத்தில் வாகன பேரணி பிரச்சாரம் நடந்தது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் வாகன பிரச்சாரம் குமாரபாளையத்தில் நடந்தது.
நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திராவிட கழகத்தின் மாணவரணி, இளைஞர் அணியினர் சார்பில், டூவீலர் வாகன பேரணி கடந்த ஜூலை 11ல் தாராபுரத்தில் தொடங்கி, சேலத்தில் ஜூலை 15ல் முடிவடைய உள்ளது. இந்த வாகன பேரணியின் 3 வது நாளாக குமாரபாளையத்தில் நாமக்கல் மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜானகிராமன், சிறப்பு அழைப்பாளராக தி.க. சொற்பொழிவாளர் தர்மபுரி யாழ் திலீபன் பங்கேற்று நீட் தேர்விற்கு எதிராக பேசினர்.இதில் பங்கேற்ற மாவட்ட தலைவர் குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், வாகன பேரணி குழு ஒருங்கிணைப்பாளர் வீரமணி உள்ளிட்ட பலர் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து பிரச்சாரம் செய்தனர்.
இது குறித்து வாகன பேரணி குழு தலைவர் சிவ பாரதி கூறியதாவது:-
இந்த வாகன பேரணி ஜூலை 15ல் சேலத்தில் நிறைவடைய உள்ளது. சுமார் 70 இடங்களில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து பிரச்சாரம் மேற்கொள்ள போகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சி.பி.ஐ. நகர செயலாளர் கணேஷ்குமார், சி.பி.எம். நகர செயலாளர் சக்திவேல், ம.தி.மு.க. நகர செயலாளர் நீலகண்டன், திராவிடர் விடுதலை கழக மாவட்டகாப்பாளர் சாமிநாதன், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் ஆறுமுகம், இலக்கியதளம் தலைவர் அன்பழகன், தி.க. நகர செயலாளர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu