உப்புக்குளம் விநாயகர், பொட்டு சாமி திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்

உப்புக்குளம் விநாயகர், பொட்டு சாமி திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
X

குமாரபாளையம் அருகே உப்புக்குளம் விநாயகர், பொட்டு சாமி திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே உப்புக்குளம் விநாயகர், பொட்டு சாமி திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உப்புக்குளம் விநாயகர், பொட்டு சாமி திருவிழா ஒரு வாரம் முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

மலர்களாலும், வண்ண வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் விநாயகர், பொட்டுசாமி சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தனர்.

மார்ச் 24ல் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பொங்கல் வைத்து வழிபடவுள்ளனர். திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!