குமாரபாளையம் அருகே திறக்கப்படாத நூலகம்: பொதுமக்கள் அதிருப்தி

குமாரபாளையம் அருகே திறக்கப்படாத நூலகம்:   பொதுமக்கள் அதிருப்தி
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வேமன்காட்டுவலசு பகுதியில் தினமும் பூட்டியே வைக்கபட்டுள்ள அரசு சார்பில் அமைக்கப்பட்ட நூலகம்.

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள நூலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வேமன்காட்டுவலசு பகுதியில் அரசு சார்பில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணியாளர் பல நாட்களாக வராததால், தினமும் பூட்டியே வைக்கபட்டுள்ளது. இதன் அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இதில் பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் இப்பகுதி பொதுமக்களும் வந்து பயன்பெற்று வந்தனர். தினமும் பூட்டியே கிடப்பதால் அரசு சார்பில் நூலகம் அமைத்தும் பொதுமக்களுக்கு பயன்படாத வண்ணம் இருந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து பரிசீலனை செய்து, வேறு பணியாளரை நியமித்தும் நூலகம் என்ற புதிய போர்டு வைத்து திறந்திருக்கும் நேரம் குறிப்பிடப்பட வேண்டும். நூலகம் தினமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!