ரிலையன்ஸ் பள்ளியில் வான வெளி ஆளில்லா ஊர்தி செயல் விளக்க நிகழ்ச்சி!

படவிளக்கம் : குமாரபாளையம் ரிலையன்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட சந்திராயன் 3 மாதிரி வடிவம்.
ரிலையன்ஸ் பள்ளியில் வான வெளி ஆளில்லா ஊர்தி செயல் விளக்க நிகழ்ச்சி
குமாரபாளையம் ரிலையன்ஸ் மேல்நிலை பள்ளியில் வான வெளி ஆளில்லா ஊர்தி செயல் விளக்க சாகச நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் ரிலையன்ஸ் மேல்நிலை பள்ளியில் வான வெளி ஆளில்லா ஊர்தி செயல் விளக்க சாகச நிகழ்ச்சி தாளாளர் ராமசாமி தலைமையில் நடந்தது. ரிலையன்ஸ் பள்ளி நிர்வாகம் மற்றும் கோவை சுமுகா கிரீன் டேக் அவியேசன் லிமிடெட் இணைந்து, சந்திராயன் 3 மாதிரி வடிவம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு, அதனை தாளாளர் ராமசாமி திறந்து வைத்தார். மாணவ, மாணவியர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த திறன் மேம்பாட்டிற்கான செயல்விளக்க பயிற்சியும் வழங்கப்பட்டது. பள்ளி செயலர் கோமதி வெங்கடாசலம், முதல்வர் பிரின்சி மெர்லின் உள்ளிட்ட இயக்குனர்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu