குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் தொழிற்சங்கங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மே. 16ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையடுத்து, தொழிற்சங்கங்கள் நிலைப்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி பாலசுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிப்பது, ஆர்பாட்டத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தல் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ. பாலுசாமி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. சுப்ரமணி, எல்.பி.எப். ஆறுமுகம், ஐ.என்.டி.யூ.சி. ஜானகிராமன், எச்.எம்.எஸ். செல்வராஜ், எல்பி.யூ.சி. சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!