குமாரபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி இனிப்புகள்
குமாரபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் மற்றும் இனிப்புகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழங்கினார்.
குமாரபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் மற்றும் இனிப்புகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழங்கினார்.
குமாரபாளையம் கற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள், இனிப்புகள் வழங்கும் விழா, நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, சங்க தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார். நகர துணை செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுணன், ரவி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வழக்கமாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணிதான் சீருடை, இனிப்புகள் வழங்குவார். அவருக்கு தற்போது உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதால் இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த கற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் போர்டு வைக்க சமீபத்தில் பெரும் பிரச்னை எழுந்தது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால், திருச்செங்கோடு டி.எஸ்.பி. நேரில் வந்து, விபரங்கள் கேட்டறிந்து அறிவுரை கூறினார். இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீஸ் ஸ்டேஷனில் இரு தரப்பினருக்கும் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வெங்கடேசன் தரப்பினருக்கு ஆதரவாக முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர் அழகேசன் ஆகியோரும், சிங்காரவேலுக்கு ஆதரவாக நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுணன், வெங்கடேசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இரு தரப்பினரும் தனி தனியாக போர்டு வைத்து கொள்ளலாம், சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் செயல்பட வேண்டும், சீருடை அணிந்து இருக்க வேண்டும், லுங்கி கட்டிக்கொண்டு ஆட்டோ ஓட்டக் கூடாது, உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து குமாரபாளையம் போலீசார் இரு தரப்பினரிடமும் அறிவுறுத்தினார்.
இதன் பின் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, சிங்காரவேல் அணியினரின் ஆட்டோ சங்க போர்டை திறந்து வைத்து வாழ்த்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu