குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம்மோதி ஒருவர் உயிரிழந்தார்.
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், இதில் வரும் வாகனங்கள் அனைத்தும் இரு புறமும் உள்ள சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. நேற்று இந்த பகுதியில், சேலம் பக்கமிருந்து வாகனங்கள் வரும் சர்வீஸ் சாலையை, முதியவர் ஒருவர் மாலை 02:50 மணியளவில் நடந்து கடந்தார்.
அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இடது கால் முழுதும் நசுங்கிய நிலையில், பலத்த அடிபட்டு கீழே விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை 05:45 மணியளவில் இறந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விசாரணை செய்ததில், இவரது சட்டை பையில் ஒரு சீட்டு இருந்ததாகவும், அதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ததிற்குண்டான விபரங்கள் மற்றும் பெயர் ராஜு, என்றும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் விலாசம் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை. அதனால் இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம், லட்சுமி நகரில் வசிப்பவர் சுரேஷ்பாபு(வயது 33. )லாரி ஓட்டுனர். நேற்று மாலை 02:30 மணியளவில், சேலத்திலிருந்து பவானி நோக்கி, தனது பல்சர் வாகனத்தில், தன் மனைவி மெகராஜ்,( 33, )என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, சேலம் கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் அருகே எதிர்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த டாட்டா கண்டெய்னர் லாரி ஓட்டுனர், இவர்கள் வாகனம் மீது மோத, நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான லாரி ஓட்டுனரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu