குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மாேதி ஐஸ் வியாபாரி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மாேதி ஐஸ் வியாபாரி உயிரிழப்பு
X
குமாரபாளையத்தில் ஐஸ் விற்கும் நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

குமாரபாளையத்தில் குல்பி ஐஸ் விற்கும் நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

குமாரபாளையம் கவுரி தியேட்டர் பின்புறம் வசிப்பவர் உமேஷ்குமார், 45. தள்ளுவண்டியில் குல்பி ஐஸ் விற்பவர். மார்ச் 1, இரவு 07:30 மணியளவில் பவானியில் ஐஸ் வியாபாரம் முடிந்து சேலம் கோவை புறவழிச்சாலை, எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே தள்ளுவண்டியை தள்ளியபடி நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசாேதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்