அடையாளம் தெரியாத மூதாட்டி இறப்பு

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார்.

அடையாளம் தெரியாத மூதாட்டி இறப்பு - குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார்.

குமாரபாளையம் சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள போட்டோ பிரேம் கடை எதிரில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்றுமுன்தினம் காலை 08:30 மணியளவில் மயக்க நிலையில் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் இவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 08:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி