அடையாளம் தெரியாத நிலையில் இறந்த முதியவர்: போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத நிலையில் இறந்த முதியவர்: போலீசார் விசாரணை
X
குமாரபாளையம் பஸ்டாண்டில் 60 வயதுள்ள முதியவர் இறந்த நிலையில், அவர் யார் என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் பஸ்டாண்டில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கும் இவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பல ஊர்களிலிருந்து அவர்களது குடும்பத்தாரால் கொண்டு வந்து விடப்படுகிறார்கள். போதிய சிகிச்சை இல்லாமல், உணவில்லாமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இருக்கும் இடத்திலேயே சிறுநீர் கழித்தல் உள்ளிட்டவைகள் செய்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு இறப்பு பஸ்டாண்ட் வளாகத்தில் நடந்து வருகிறது. நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story