சுதந்திரமாக செயல்பட முடியவில்லை-குமாரபாளையம் நகராட்சி சேர்மன் வேதனை

சுதந்திரமாக செயல்பட முடியவில்லை-குமாரபாளையம்  நகராட்சி சேர்மன் வேதனை
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் விஜய் கண்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சேர்மன் தேசியக்கொடி ஏற்றி சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

75வது சுதந்திர தினவிழாவையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதில் விஜய்கண்ணன் பேசும்போது குமாரபாளையத்தில் போதை வஸ்து விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க சென்றால் என்னை செயல்பட விடாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள். தலைவர் பதவி என்பது முக்கியமல்ல. எங்கு இருந்தாலும் என்னால் ஆன உதவியை செய்து கொண்டு இருப்பேன். அனைவருக்கும் உதவி செய்யத்தான் இந்த பதவிக்கு வந்தேன். பணம் சம்பாதிக்க அல்ல, அதற்கு எனக்கு நான் பார்த்து வரும் தொழில் உள்ளது. சுதந்திர நாட்டில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றார்.

இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், தர்மராஜ், வேல்முருகன், ஜேம்ஸ், கனகலட்சுமி, மகேஸ்வரி, சுமதி, பாண்டிசெல்வி, விஜயா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஜுல்பிஹார் அலி , சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதன் பின்னர் குமாரபாளையம் பஸ் நிலைய வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் வழித்தோன்றல் வாரிசுகள் நல சங்கம் சார்பில் தேசிய கொடியினை சேர்மன் விஜய்கண்ணன் ஏற்றி வைத்தார்.


Tags

Next Story
ai healthcare products