குமாரபாளையத்தில் மனித நேய தினம், தளபதி லயன்ஸ் சங்கம் அன்னதானம் வழங்கல்
குமாரபாளையத்தில் உலக மனித நேய தினத்தையொட்டி தளபதி லயன்ஸ் சங்கத்தார் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கில் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட வர்கள் நாள் ஒன்றுக்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் மூன்று மதியம் மற்றும் இரவு வேளைகளில் அன்னதானம் வழங்கப்பட்டது
இதன் தொடர்ச்சியாக உலக மனித நேய தினத்தையொட்டி ஆதரவற்றோர், யாசகர்கள் உள்ளிட்ட 200 நபர்களுக்கு பட்டய தலைவர் ஜெகதீஸ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகமுககவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சண்முகசுந்தரம், செல்வராஜ், குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu