குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தி.மு.க. இளைஞரணி மாநில செயலர் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்த நாள் விழா குமாரபாளையம் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. காவேரி நகர் பகுதியில் நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் செல்வம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமசாமி தலைமை தாங்கினார்.

மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் கட்சியின் கொடியேற்றி வைக்க, முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெகன்னாதன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

விழாவையொட்டி 45 மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னாள் நகர செயலர்கள் ஜெயபிரகாஷ், வெங்கடேசன், நிர்வாகிகள் அன்பழகன், ராஜ்குமார், ஐயப்பன், பழனிச்சாமி, முருகன், புவனேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!