உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பழங்கள், பால், பன் ஆகியன வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநில தி.மு.க. இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்த நாள் விழாவையொட்டி,
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி, குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க சார்பில், வடக்கு நகர திமுக பொறுப்பாளர், நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பழங்கள், பால், பன் ஆகியன வழங்கப்பட்டது. தலைமை டாக்டர் பாரதி, நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ஜேம்ஸ், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், கந்தசாமி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கயல்விழி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதே போல் தெற்கு நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் உதயநிதியின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. 16 வார்டு பகுதியில் கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள், வழங்கப்பட்டது. சுந்தரம் காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் ஆயிரத்து 229 மாணவ, மாணவியர்களுக்கு தி.மு.க. மாநில சொத்து பாதுகாப்புகுழு உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் நோட்டுகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டமலை பகுதியில் உள்ள அன்னை முதியோர் இல்லம், ஓலப்பாளையம் பகுதியில் உள்ள பாசம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu