உதயநிதி துணை முதல்வர்; தி.மு.க.வினர் கொண்டாட்டம்

உதயநிதி துணை முதல்வர்; தி.மு.க.வினர் கொண்டாட்டம்
X

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டதை நகரமன்ற தலைவர், வடக்கு நகர தி.மு.க பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டதை குமாரபாளையம் வடக்கு மற்றும் தெற்கு திமுக நிர்வாகிகள் கொண்டாடினர்.

உதயநிதி துணை முதல்வர் ஆனதிற்கு தி.மு.க.வினர் கொண்டாட்டம்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டதை குமாரபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நிர்வாகிகள் கொண்டாடினர்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க சார்பில், நகரமன்ற தலைவர், வடக்கு நகர தி.மு.க பொறுப்பாளர் விஜய் கண்ணன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் நகர தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதே போல் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினர். முன்னாள் நகர செயலர் செல்வம், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், சத்தியசீலன், ஜேம்ஸ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வேல்முருகன் மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, அயலக அணி உள்ளிட்ட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டதை, தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!