தனியார் பஸ் மீது கிரேன் மோதி பெண்கள் இருவர் படுகாயம்

தனியார் பஸ் மீது கிரேன் மோதி பெண்கள் இருவர் படுகாயம்
X
குமாரபாளையத்தில் தனியார் பஸ் மீது கிரேன் மோதி பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் பேருந்து மீது கிரேன் மோதிய விபத்தில், பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் இரவு 08:10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எதிர்மேடு, தனியார் கல்லூரி எதிரில், சேலத்திலிருந்து, பவானி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

கல்லூரி பக்கமிருந்து சாலையை கடக்க முயற்சித்த கிரேன் ஒன்று எதிர்ப்புறமாக சென்றுகொண்டிருந்த நிலையில், பேருந்தின் கண்ணாடி மீது கிரேனின் பூம் கொக்கி மோதியது.

திடீரென நிகழ்ந்த இந்த மோதலில், கண்ணாடி உடைந்தது, பேருந்தில் பயணம் செய்த தாரணி (29), தேவி (29) இரு பெண்களும் பலத்த காயமடைந்தனர். கிரேன் ஓட்டுனரான, ஆனங்கூர் சாலை பெரியார் நகரில் வசிக்கும் குமார் (49) என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து குமாரபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!