குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதி விபத்து: பெண்கள் இருவர் காயம்

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதி விபத்து: பெண்கள் இருவர் காயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் உடையார்பேட்டையை சேர்ந்த உறவினர்கள் நித்யா, 32, சித்ரா, 33. கூலித்தொழிலாளர்கள். நேற்றுமுன்தினம் இரவு கவுரி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே 07:15 மணியளவில் நித்யா டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் வாகனத்தில் நித்யா ஓட்ட, சித்ரா பின்னால் உட்கார்ந்தவாறு வந்தார்.

அப்போது எதிரே வேகமாக வந்த ஸ்பிலெண்டர் டூவீலரில் வந்த நபர் இவர்கள் வந்த வாகனம் மீது மோதியதில், நித்யாவிற்கு நடு வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. சித்ராவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுனர் எல்.ஐ.சி.ஏஜண்ட், சிவசக்தி நகரை சேர்ந்த சுந்தர்ராஜ், 52, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது