டூவீலரில் நிலை தடுமாறி விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

டூவீலரில்  நிலை தடுமாறி விழுந்து விபத்து: இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம்

குமாரபாளையம் அருகே டூவீலரில் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 22. போட்டோ ஸ்டுடியோ கூலி தொழிலாளி. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி என்ற ஊரில் நடைபெறும் திருமணத்தில் போட்டோ எடுக்க, தன் நண்பர் முத்து,17, என்பவரை உடன் அழைத்துக்கொண்டு தனது பல்சர் டூவீலரை ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை 03:00 மணியளவில் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே வந்த போது, முன்னால் சென்ற வண்டியை முந்த முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai in future agriculture