குமாரபாளையத்தில் வீட்டுமுன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருட்டு: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் வீட்டுமுன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருட்டு: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் ஆனந்தன், 37. தனியார் நிறுவன பணியாளர். இவர் இரவு தனது வீட்டின் முன்பு தன் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லேண்டர் பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார்.

மறுநாள் எழுந்து வந்து பார்த்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் ஆனந்தன் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!