சாலை ஓரமாக நின்றவர் மீது டூவீலர் மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி படுகாயம்!

சாலை ஓரமாக நின்றவர் மீது டூவீலர் மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி படுகாயம்!
X
குமாரபாளையத்தில் சாலை ஓரமாக நின்றவர் மீது டூவீலர் மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி படுகாயமடைந்தார்.

சாலை ஓரமாக நின்றவர் மீது டூவீலர் மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி படுகாயம்

குமாரபாளையத்தில் சாலை ஓரமாக நின்றவர் மீது டூவீலர் மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் மாது, 56. சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை 11:30 மணியளவில், சரவணா தியேட்டர் அருகே சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார்.

அவ்வழியே வேகமாக வந்த பஜாஜ் பல்சர் டூவீலர் ஓட்டுனர் இவர் மீது மோதியதில் மாது பலத்த காயமடைந்தார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare