குமாரபாளையத்தில் தம்பதியர் மீது டூவீலர் மோதல்: தொழிலாளி படுகாயம்

குமாரபாளையத்தில் தம்பதியர் மீது டூவீலர் மோதல்: தொழிலாளி படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் தம்பதியர் மீது டூவீலர் மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் அம்பேத்கர் தெருவில் வசிப்பவர்கள் முரளி, 62, கமலா, 52. விசைத்தறி கூலித் தொழிலாளிகள். இருவரும் தங்கள் மூத்த மகன் வீட்டிற்கு போய்விட்டு தங்கள் வீட்டிற்கு செல்வதற்காக, நேற்றுமுன்தினம் இரவு 08:30 மணியளவில் ஜி.ஹெச்.அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் போது, இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த பல்சர் வாகனம் மோதி முரளி படுகாயமும், கமலா லேசான காயமும் அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் முரளி ஈரோடு தனியார் மருத்துவமனையிலும், குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் கமலாவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பல்சர் ஓட்டுனர், குமாரபாளையம் காவேரி நகர் கூலி தொழிலாளி சுதீஷ்குமார், 21, வசம் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்