குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, எட்டிக்காமேடு பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி, 65. டிரைவர். இவரது மனைவி மணி, 60. இருவருக்கும் உடல்நலக்குறைவு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற ஸ்பெலேண்டேர் புரோ டூவீலரில் அப்புசாமி ஓட்ட, மணி பின்னால் உட்கார்ந்து வந்தார்.

எக்ஸல் கல்லூரி அருகே வந்தபோது, அதே திசையில் வேகமாக வந்த பல்சர் வாகன ஓட்டுநர் இடது புறம் திருப்பியதில் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மணி உயரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து, விபத்துக்கு காரணமான குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியை சேர்ந்த கவின், 17, என்ற முதலாம் ஆண்டு பி.பார்ம்., படிக்கும் மாணவனை கைது செய்தனர்.

Tags

Next Story
ai and business intelligence