குமாரபாளையம் அருகே டூவீலர் - கார் மோதல்: ஒருவர் படுகாயம்; கார் ஓட்டுநர் கைது

குமாரபாளையம் அருகே டூவீலர் - கார் மோதல்: ஒருவர் படுகாயம்; கார் ஓட்டுநர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார்; கார் ஓட்டுனர் கைது செய்யபட்டார்.

ஈரோடு பெருமாபாளையத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி, 38. டிரைவர். நேற்று முன்தினம் இவர் தனது ஸ்கூட்டி பெப்ட் டூவீலரில் குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். ரிலையன்ஸ் பள்ளி அருகே பகல் 11:30 மணியளவில் வந்தபோது, எதிரே வந்த மாருதி ஆம்னி வாகனம் இவரின் டூவீலர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து, சுப்பிரமணி சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சுப்பிரமணி மயக்கமான நிலையில் இருந்ததால், அவரது மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததில் ஆம்னி ஓட்டுனர் பள்ளிபாளையம் லட்சுமிபுரத்தை சேர்ந்த ரவி, 42, கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare