குமாரபாளையம் அருகே ஒரே வீட்டில் 2 பாம்புகள்: தீயணைப்புப் படையினர் மீட்பு

குமாரபாளையம் அருகே ஒரே வீட்டில் 2 பாம்புகள்: தீயணைப்புப் படையினர் மீட்பு
X

 குமாரபாளையம் அருகே ஒரே வீட்டில் பிடிபட்ட இரு பாம்புகள்.

குமாரபாளையம் அருகே ஒரே வீட்டில் இருந்த இரண்டு பாம்புகளை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப்படை, சின்னார்பாளையம் பகுதியில் வசிப்பவர் தமிழரசன்,வயது 35.விவசாயி. இவரது வீட்டு மாடியில் மற்றும் வீட்டின் அருகே உள்ள மரத்தில் பாம்புகள் இருப்பதை கண்டார்.

இது குறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தர, நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையிலான படையினர் நேரில் சென்று, மாடியில் மற்றும் மரத்தில் இருந்த இரு பாம்புகளையும் பிடித்தனர்.

அந்த பாம்பு கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்தது என தெரியவந்தது. தீயணைப்புத்துறையினரிடம் பிடிபட்ட பாம்புகள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச்சென்று விடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!